நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாமக்கல் முல்லை நகரில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார்

இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே ஆர் எம் ராஜேஷ்குமார் எம்.பி சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் பெ. ராமலிங்கம் சேந்தமங்கலம் கு. பொன்னுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்

இந்த கூட்டத்தில் நாளைக்கு மார்ச் 1 ஆம் தேதி நடக்க இருக்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழாவிற்கு உரிய ஏற்பாடுகள் குறித்தும் பிறந்த நாளில் முக்கிய இடங்களில் 70 அடி உயரத்தில் திமுக புதிய கொடிக்கம்பங்கள் அமைப்பது கொடி ஏற்றுவது குறித்தும் அடுத்து மாவட்ட நிர்வாகம் ஒன்றியம் நகரம் பேரூர் ஆகிய திமுக சார்பாக ஆங்காங்கே சிறப்பாக பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்தும் அதை தொடர்ந்து நாளை மார்ச் 1 ஆம் தேதி மாவட்டதில்
பிறக்கின்ற குழந்தைகள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சிகளும் அடுத்து 700 இடங்களில் மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாக்களும் தொடர்ந்து ஏற்பட ஏற்பாடு செய்யப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

அதைத் தொடர்ந்து
இந்த நிகழ்ச்சியில் பேசிய நாமக்கல் கிழக்கு கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் பேசுகின்ற பொழுது
இந்த நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுவானது முன்கூட்டியே நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் புசத்திரம் ஒன்றிய செயலாளர் திமுக செயலாளர் துரை ராமசாமி காலமானார்என்பதால் சற்று காலதாமதமாக இன்று நடத்தப்படுவதாகவும் அவருக்கு இங்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும் கூறிய அவர்

அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது ஆண்டு பிறந்தநாள் விழாவான நாளை தமிழக முதல்வர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் காலை 8 மணி முதல் மாலை வரை திமுக நிர்வாகிகளை அமைச்சர்கள் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளாட்சி பிறந்த தேதிகள் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் முன்னிட்டு அவர்களை சந்தித்து வாழ்த்து பெற இருக்கின்றார் என்றும்

அதைத் தொடர்ந்து மாலையில் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடக்க இருக்கின்ற திமுக தலைவரின் 70 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அகில இந்திய அளவில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மாநில முதல்வர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுமு. க. ஸ்டாலினை வாழ்த்தி பேச இருக்கிறார்கள் என்றும்

அன்றைய தினம் மார்ச் 1 ஆம் தேதி நாளைநாமக்கல் கிழக்கு மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மிகச் சிறப்பாக ஒலிபெருக்கிகள் அமைத்து பொது மக்களுக்கு தெரியப்படுத்தி பிரமாண்டமான70 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை ஏற்படுத்து தேவைப்படும் இடங்களில் புதிய கொடிக்கம்பங்களை
அமைத்தும் புதுப்பித்தும் கொடியேற்றுவதோடு புதிய கொடிக்கம்பங்களை 70 அடி உயரத்தில் அமைக்க வேண்டும் என்றும் அப்போது கே ஆர் என் ராஜேஷ்குமார் கேட்டுக்கொண்டார்மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கொடியேற்றம் இடங்களில் சர்க்கரை பொங்கல் இனிப்பு போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக் கொண்டார்

தொடர்ந்து பேசிய நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே .ஆர்.என் ராஜேஷ்குமார் எம்பி அடுத்து மார்ச் 2 ஆம் தேதி மாலை நாமக்கல் மாவட்ட ராசிபுரத்தில் நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர் எம் டி என்று அழைக்கப்படும் ஆர் எம் துரைசாமியின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு விளையாட்டு இளைஞர் நலம் துறை அமைச்சர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள ஒரு முக்கிய தனியார் ஓட்டலில் தங்குகிறார் மறுநாள் 3 ஆம் தேதி காலை 8 மணிக்கு நாமக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு நடக்க இருக்கிற முதல் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்து பார்வையிடுகிறார்

அதை அடுத்து காலை 9 மணிக்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே பொன்னுசாமியின் பேரன் திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்த உள்ளார்அதைத் தொடர்ந்து மீண்டும் நாமக்கல் தனியார் ஹோட்டலுக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் அங்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட , திமுக ஒன்றிய,நகர , பேரூர் நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின்

அதைத்தொடர்ந்து மாலை 3 மணி அளவில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் , நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அறக்கட்டளை சார்பாக அமைக்கப்பட்டு இருக்கின்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கத்தின் மார்பளவு வெங்கல சிலையை திறந்து வைத்திருக்கிறார்அடுத்து அதே கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பேச உள்ளார் என்றும்

அதை தொடர்ந்து மோகனூர் செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட 15 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இணை மின் உற்பர்த்தி நிலையத்தை அதிமுக அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு கிடப்பில் போட்டது அதை மீண்டும் இப்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவக்குவதற்காக ரூ 56 கோடியில் புதுப்பிக்க அனுமதி வழங்கி அந்த பணிகள் நடந்து வருகிறது அந்த பணி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிடு ஆய்வு செய்கிறார்

அதை தொடர்ந்து அங்கு மோகனூர் ஒன்றிய திமுக சார்பாக தமிழக முதல்வர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா 70 அடி திமுக கொடி கம்பத்தில் கொடியேற்றி வைக்கிறார்அதை அடுத்து மோகனூர் வாங்கல் வழியாக கரூர் மாவட்டத்திற்கு செல்ல இருப்பதாகவும் ஆங்காங்கே அதிக அளவில் திமுக தொண்டர்கள் கூடி வரவேற்க வரக்கூடாது என்றும் முக்கிய பிரமுகர்கள் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு வரவேற்க வேண்டும் என்றும் அப்போது கே ஆர் என் ராஜேஷ்குமார் கேட்டுக்கொண்டார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *