பள்ளி தேடி வந்த புத்தக பரிசு

வாசிப்பை சுவாசிப்போம் திட்டத்தில் சிறந்த பள்ளிக்கு பரிசு வழங்கி அசத்தல்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வாசிப்பை சுவாசிப்போம் திட்டத்தில் சிறப்பாக பங்கேற்றதை பாராட்டி ரூபாய் 7000 மதிப்பிலான புத்தகங்களை பரிசாக இதயம் நிறுவனம் பள்ளி தேடி வந்து வழங்கி பாராட்டியது.


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சமீபத்தில்
தேவகோட்டை ரோட்டரி கிளப் மற்றும் விருதுநகர் இதயம் நிறுவனமும் இணைந்துப்ராஜெக்ட் பிரேம்குமார் என்கிற வாசிப்பை சுவாசிப்போம் திட்டத்தினை நடத்தினார்கள்.அதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்கள் தொடர்ந்து புத்தகங்களை வாசித்து அதனை வீடியோவாக பதிவிட்டனர். மாணவர்களின் ஆர்வத்தை பாராட்டி இதயம் நிறுவனம் நிறுவனர் முத்து பள்ளிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியதுடன் ரூபாய் 7000 மதிப்பிலான புத்தங்களை பள்ளிக்கு பரிசாக அனுப்பினார். இதயம் நிறுவனத்தின் பணியாளர் ஆனந்த் பள்ளிக்கே வந்து புத்தகங்கள் அடங்கிய பெட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கத்திடம் வழங்கினார். பள்ளியின் சார்பாக இத்திட்டத்தின் பயிற்சியாளர் நாகலிங்கத்துக்கும், இதயம் நிறுவனர் முத்துவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.புத்தகங்கள் அனைத்துமே மாணவர்களின் வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது பாராட்டுக்குரியது.

பட விளக்கம் :
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வாசிப்பை சுவாசிப்போம் திட்டத்தில் சிறப்பாக பங்கேற்றதை பாராட்டி ரூபாய் 7000 மதிப்பிலான புத்தகங்களை பரிசாக இதயம் நிறுவனம் பள்ளி தேடி வந்து வழங்கி பாராட்டியது. இதயம் நிறுவனத்தின் பணியாளர் ஆனந்த் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வசம் புத்தகங்கள் அடங்கிய பெட்டியை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *