திருநெல்வேலி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை நேரடியாக சந்தித்து, வெள்ளாங்குளி அரசு மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு.திருமலைக்குமார், முதுகலை ஆசிரியர் திரு.மகேஷ், பட்டதாரி ஆசிரியர் திரு.ஜீலியன் ஆகியோர் பணிபதிவேட்டில் திருத்தம் செய்யப்பட்டு, ஆசிரியர்களை பழிவாக்கும் செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கவும், ஆசிரியர்கள் பணிபதிவேட்டில் மீண்டும் சரி செய்து தரவும்,அதற்கான செயல்முறைகளை தலைமையாசிரியர் செய்ய வேண்டி மனு அளித்து பேசப்பட்டது.முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும்,பணி பதிவேடு மீண்டும் சரி செய்து தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இதை கோரிக்கை மனு இணைஇயக்குநர் (மேல்நிலை கல்வி) அவர்களுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க பொதுச்செயலாளர் முனைவர்.வெ.பெரியதுரை தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்களும்,தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் , தமிழ்நாடு பட்டதாரி சங்க மாவட்ட தலைவர்.திரு.S.வெங்கடேசன் தலைமையில் பட்டதாரி ஆசிரியர்களும் , மாநில தமிழாசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகி திரு. சங்கரநாரயணன் ஆகிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். .
Dr.V.பெரியதுரை
மாநில பொதுச்செயலாளர் & மாவட்ட செயலாளர்
TNPET & PDA நெல்லை