தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி
ஆணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்கான ஊதியம் ரூ.5200 – ரூ.20,200 தர ஊதியம் ரூ.1900/- வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் பணிநீக்க காலம் மற்றும் தற்போதைய பணிக்காலத்தில் இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க கேட்டு விண்ணப்பம் செய்து காத்திருப்போருக்கு நெடுஞ்சாலைத்துறையிலேயே விரைந்து பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும்,
சாலைப் பராமரிப்பு பணியிடங்கள் காலியாக உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப்பணி
யாளராக பணி வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு ஒட்டுமொத்த ஒப்பந்தம் நடைபெற கைவிடப்பட்டதாக அறிவித்தாலும் புதுப்பிக்கப்படும் நெடுஞ்சாலைகளை தனியார் ஐந்து வருடம் பராமரிக்கும் நடைமுறையை ரத்து வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோட்டப் பொறியாளர் அலுவலகத்தின் முன்பு தலையில் முக்காடு அணிந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.
போராட்டத்தை அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் நீதிராஜா துவக்கி வைத்து பேசினார். பின்னர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சோலையப்பன் கோரிக்கை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் இணைச் செயலாளர் பரமசிவன், வாழ்த்தி பேசினார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் இரா.தமிழ் நிறைவு செய்து வைத்து பேசினார். மாவட்டப் பொருளாளர் முருகன்நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *