கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை – நெல்லை புதிய கமிஷனர் ராஜேந்திரன் பேட்டி

நெல்லை போலீஸ் கமிஷனராக இருந்த அவினாஸ் குமார் மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர போக்குவரத்து இணை கமிஷனராக இருந்த ராஜேந்திரன் பணி மாறுதல் செய்யப்பட்டு நெல்லை மாநகர புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

அவர் இன்று நெல்லை வந்தார். அவருக்கு கமிஷனர் அலுவலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு, காவல்துறை உயர் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள கோப்புகளில் கையெ ழுத்திட்டு , புதிய கமிஷனராக ராஜேற்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டம்- ஒழுங்கை பாது காப்பது, குற்ற செயல்களை தடுப்பதே எனது முதல் கடமையாக இருக்கும். கஞ்சா விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கஞ்சா விற்பனை தொடர்பாக எந்த தகவல் இருந்தாலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 9498122722 என்ற எனது எண்ணில் தகவல் தெரிவித்தால் அவர்களின் ரக சியம் பாதுகாக்கப்பட்டு கஞ்சா கும்பல் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

குற்றச்செயலில் ஈடுபடு பவர்களுக்கு நெல்லை மாநகர பகுதியில் இடம் இல்லை. மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறைடன் இணைந்து மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையவும், தேவையற்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவதை தவிர்க்கவும் அனைத்து விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படும்.
காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், பணிச்சுமையை போக்க சென்னை போன்று நெல்லையிலும் சிறப்பு பயிற்சி வழங்கப்படும். காவல்துறை யினர் பணி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த நெல்லை மாநகர் பகுதியில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் உடலில் பொருத்தப்படும் காமிரா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாநகர பகுதிகளில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் விதமாக சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *