வெ.முருகேசன்- செய்தியாளர், திண்டுக்கல்.

திண்டுக்கல் மாவட்டத்தில்ஏ ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்கள் சமூக பொருளாதார மேம்பாடு அடையும் வகையில், தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசாணையில், தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக இதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்கள் தாட்கோ மூலம் விண்ணப்பிக்கலாம். இதன்படி ரூ.3,00,000 திட்டத்தொகையில் ரூ.90,000 மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர், சாதிச்சான்று, வருமான சான்று(ரூ.3 இலட்சத்திற்குள்) ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, பட்டய கணக்காளரிடமிருந்து பெற்ற திட்ட அறிக்கை முதலிய ஆவணங்களுடன் பான் கார்டு, ஜிஎஸ்டி பதிவு சான்று இவற்றுடன் www.application.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது 18-65 வயதிற்குள் இருக்க வேண்டும். ஜிஎஸ்டி, பான் கார்டு,
அட்ரஸ் புரூப் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது. தாட்கோவின் தேர்வு குழு மூலம், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட பின் சிமெண்ட் முகவருக்கான விண்ணப்பங்கள் டி.ஏ.என்.சி.ஈ.எம் நிறுவனம் மூலம் பெற்று வழங்கப்படும். தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5,000 வைப்புத்தொகை டி.ஏ.என்.சி.ஈ.எம் நிறுவனத்திற்கு செலுத்தப்படும். கூடுதல் செலவினம் ஈடுசெய்ய ஆதிதிராவிடர் (எஸ்சி) தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 இலட்சம் மானியமாக வழங்கப்படும். பழங்குடியினர் (எஸ்டி) தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் மானியமாக வழங்கப்படும். சிமெண்ட் விற்பனை தொடர்பான விளம்பரம் செய்ய தேவையான சிற்றேடு பிரசுரங்கள் மற்றும் பெயர்ப்பலகை ஆகியவை டி.ஏ.என்.சி.ஈ.எம் நிறுவனம் மூலம் வழங்கப்படும்.


தேர்வ செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு சிமெண்ட் விற்பனை செய்வதற்கான வழிமுறைகள் விளம்பர உத்திகள், கொள்முதல் செய்வோரை அணுகும் முறை சம்பந்தப்பட்ட பயிற்சிகள் டி.ஏ.என்.சி.ஈ.எம் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்படும்.
பயனாளிகள் வியாபார வளர்ச்சி குறித்து கண்காணிக்கப்பட்டு மாதாந்திர முன்னேற்ற அறிக்கையும் டி.ஏ.என்.சி.ஈ.எம் நிறுவனம் மூலம் தாட்கோவிற்கு வழங்கப்படும். தாட்கோ நிறுவனத்தின் இரண்டாம் நிலை அலுவலர்கள் மற்றும் மாவட்ட மேலாளருடன் இணைந்து கண்காணிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ அலுவலகத்தை அணுகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


விண்ணப்பதாரர் ஆதிதிராவிடராக இருப்பின் http://application.tahdco.com, என்ற இணையதள முகவரி மூலமாகவும், பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 9445029460, 0451-2460096 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாய்ப்பினை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *