சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகள் 2023 முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளை திரு. தேவி பாரதி (நாவல்), திருமதி சந்திரா தங்கராஜ் (சிறுகதை) கவிஞர் தேவதேவன் (கவிதை) திரு. சி.மோகன் (மொழிபெயர்ப்பு) திரு. பிரளயன் (நாடகம்), பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் (உரைநடை) ஆகியோருக்கு வழங்கி கௌரவித்தார்.மற்றும் பொற்கிழிகள் வழங்கி விழாப் பேருரையாற்றினார்.


இந்த புத்தக கண்காட்சி வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொது மக்கள் பார்வையிடலாம். இந்த ஆண்டு கூடுதலாக 200 அரங்குகளுடன் மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அதில், சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய அரங்கு ஒன்று பிரத்யேகமாக அமைக்கப்பட இருக்கிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *