சுமார் இரண்டரை வருடமாக கிடப்பில் போடப்பட்ட தார் சாலையை போட்டுத்தரகோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை.வைத்துள்ளனர்.

பள்ளிச் செல்லும் பிள்ளைகளும் விவசாய நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டுவருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பேருந்து நிலையத்திலிருந்து குறிஞ்சிப்பாடி தொடங்கிஎம் ஆர் கே நகர் வழியாக சென்று வரதராஜன்பேட்டை கல்குணம் கிருஷ்ணாபுரம் வரை செல்ல வேண்டிய சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் உள்ள பழுதடைந்த கிராமசாலையை தார் சாலையாக போடுவதற்காக, சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு ரோட்டில் ஜல்லி மட்டுமே கொட்டி விட்டு இது நாள் வரையில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் சாலையை போடாமல் காலம் தாழ்த்தி வருகின்றதாகவும், இதனால் சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு விவசாயம் செய்ய செல்ல வேண்டிய இந்த சாலையில் பயிர்கலுக்கு உரம் இடுவதற்கு மாட்டு வண்டிகளை பயன்படுத்த முடியாமலும் இருசக்கர வாகனங்களிலும் சைக்கிள் சென்றாலும் பஞ்சர் ஆகி விடுவதாகவும் இதனால் ஒவ்வொரு மூட்டையாக தலையில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்போது விவசாயிகளும் பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் இரண்டரை வருடமாக கிடப்பில் போடப்பட்ட சாலையை தார் சாலை அமைத்து தர விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர். கிராம வளர்ச்சியே நம் இந்திய நாட்டின் வளர்ச்சி விவசாயமே நம் உயிர் நாடி ஆகையால் மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளும் ஆய்வுகள் மேற்கொண்டு காலம் தாழ்த்தாமல் சாலை போடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *