கொல்லப்பள்ளிப்பள்ளி சீனிவாஸ் அசோக், புதுச்சேரி முதலமைச்சர் அவர்கள் குறித்து அவதூறாக பொதுவெளியில் தகாத வார்த்தைகளால் மாண்பை சீர்குலைக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையிலும் வரம்பு மீறி பேசியதை கண்டித்து அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர்(எ) தக்ஷிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன், ரமேஷ், புதுச்சேரி அரசு கொறடா ஆறுமுகம்(எ) ஏகேடி தலைமையில் புதுச்சேரி காவல்துறை டிஜிபிடம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தனர்.
புதுச்சேரி புதுவையின் ஒரு பகுதியாக ஏனாம் உள்ளது.இது ஒரே தொகுதியை கொண்ட பகுதியாகும். பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏனாம் தொகுதியில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக். சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ.வாக செயல்படுகிறார். இவர், தனது தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று ஏற்கனவே குற்றஞ்சாட்டி கடந்த நவம்பர் மாதம் 7-ந் தேதி சட்டசபை கூட்ட அரங்கின் வாசலில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு பா.ஜ.க. மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து அவரை சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அழைத்து சென்று முதல்-அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஏனாம் தொகுதியில் பணிகளை விரைவுபடுத்துவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். ஆனால் ஏனாம் தொகுதியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறிப்பிட்டதுபோல் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தநிலையில் ஏனாமில் நடக்கும் கலைவிழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே தனது ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்திய கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அவதூறாக பேசியுள்ளார். இதனால் என்.ஆர்.காங்கிரசார் அதிர்ச்சியடைந்தனர். இத்தகைய சூழலில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது ஏனாம் பயணத்தை ரத்து செய்தார். அவர் தனக்கு பதிலாக அமைச்சர் லட்சுமிநாராயணனை ஏனாமுக்கு அனுப்பிவைத்தார்.
அமைச்சர் லட்சுமிநாராயணன் ஏனாம் சென்றுள்ள நிலையில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. மண்டல நிர்வாகி அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் புதுவை அரசுக்கு எதிராக தொடர் கோஷங்களையும் எழுப்பினர். என்.ஆர்.காங்கிரஸ் மறியல் இதனிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் விமர்சித்து பேசியதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தவளக்குப்பம் சந்திப்பில் லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரியாங்குப்பத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாஸ்கர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அமைச்சர் லட்சுமிநாராயணன் தொகுதியான ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரசார் அஜாந்தா சந்திப்பிலும் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ.வின் உருவ பொம்மை தீவைத்து எரிக்கப்பட்டது. உருவப்படம் கிழிக்கப்பட்டது. அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் புதுச்சேரிக்குள் நுழையவே முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பா.ஜ.க. ஆதரவாளரான சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதைப்போல் காரைக்கால் வடக்கு தொகுதி எம்எல்ஏ திருமுருகன் தலைமையில் என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் காரைக்கால் புதிய பஸ் நிலையம் எதிரே, ஊர்வலமாக வந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காரைக்கால் நகர போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கொல்லப்பள்ளிப்பள்ளி சீனிவாஸ் அசோக், புதுச்சேரி முதலமைச்சர் அவர்கள் குறித்து அவதூறாக பொதுவெளியில் தகாத வார்த்தைகளால் மாண்பை சீர்குலைக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையிலும் வரம்பு மீறி பேசியதை வன்மையாக கண்டித்து அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர்(எ) தக்ஷிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன், ரமேஷ், புதுச்சேரி அரசு கொறடா ஆறுமுகம்(எ) ஏகேடி தலைமையில் புதுச்சேரி காவல்துறை டிஜிபிடம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தனர். அதனைத்தொடர்ந்து முதல்வர்ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து எம்எல்ஏ சீனிவாஸ் அசோக் மீது நடவரக்கை எடுக்க வலியுறுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *