கனிமொழி பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு வி.எம்.எஸ். நகரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மாநகர திமுக துணைச் செயலாளரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதா முருகேசன் தலைமை வகித்தார்.


அவைத்தலைவர் அந்தோணி முத்துராஜா, செயலாளர் முருகன், ஞானக்கண், லெட்சுமி, பொருளாளர் செல்வகுமார், வட்ட பிரதிநிதிகள் மகேஸ்வரன், பாலமுருகன், ஆட்டோ குமார், படையப்பா, கிருஷ்ணன் பிள்ளை, நிர்வாகிகள் முத்துராஜ், முருகேசன், மாரியப்பன், கிருபை மணி, முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தையல் மிஷன் 4, அயர்ன் பாக்ஸ் 4, சேலை 1000 நபர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்கள் 20 பேருக்கு காக்கி சீருடை வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்: நம் பகுதியில் கனிமொழி எம்.பி, எப்படியெல்லாம் பணியாற்றுகிறார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இந்த தொகுதி வளர்ச்சி அடைவதற்காக மாநில அரசு அதிகாரிகள், ஒன்றிய அரசு அதிகாரிகள், ஒன்றிய அமைச்சர்கள் ஆகியோரிடம் தொகுதி வளர்ச்சிக்குரிய கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார்.
இந்தியா ஒற்றுமையான நாடு என்பதை காட்டும் வகையில் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார். அதுபோக, தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் கொடுக்கும் அனைத்து கோரிக்கை மனுக்களுக்கும் தீர்வு காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, பிரதமரின் மருத்துவ உதவித்திட்டத்தில் பல்வேறு நபர்கள் பலனடைந்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்து வரும் தேர்தல் களத்தில் கனிமொழியை மீண்டும் இதே தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவார். தொட்டப்பணி, தொடர்ந்தபணி முழுமையாக நிறைவு பெறும். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். ஜாதி, மதம் இல்லாத சமூகநீதி கொண்ட தமிழகம் உருவாக வேண்டும். முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற விழாவில் மதத்தை மதிக்கிறோம். மதவெறியை எதிர்க்கிறோம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி நடைபெறுகிறது. தமிழக மக்கள் நல்ல உழைப்பாளிகள், கல்விதிறன் உள்ளவர்கள். இந்தியாவில் தொழில்துறையில் 24வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3வது இடத்தில் உள்ளது. தொலைநோக்கு திட்டத்தோடு முதல்வர் பணியாற்றி வருகிறார். ஊட்டச்சத்து குறைவை தடுக்கும் வகையில் காலையில் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. அதன் மூலம் குழந்தைகளுக்கு கல்வித்திறன் அதிகரித்துள்ளது. வருகைப் பதிவேடும் கூடியுள்ளது.
பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 40 சதவீதம் வழங்கப்படுகிறது. கல்லூரி படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, வழங்கப்பட்டு வருகிறது.

பெண் கல்வி பயின்றால், அந்த குடும்பம் மட்டுமின்றி அவர்களை சுற்றி இருப்பவர்களின் வாழ்வும் முன்னேற்றப்பாதைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தமிழ் சமுதாயம் முன்னேற வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு மக்கள் பணி செய்வது யார்? என்று சிந்திக்க வேண்டும். கொள்கை என்ன? கோட்பாடு என்ன? என்றே தெரியாமல். எதை எதையோ கூறி, ஊரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள்.
தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த பகுதி 2015, 2016, 2019 கால கட்டத்தில் ஏற்பட்ட மழையின் போது, எவ்வளவு பெரிய பாதிப்பு வந்ததை நீங்களும் அறிவீர்கள். அந்த நேரம் உங்களோடு இருந்து பணியாற்றியவர்கள் நாங்கள். இனிவரும் காலங்களில் அதுபோன்ற நிலை வராது. சில கால்வாய் அமைக்கப்பட்டு, பக்கிள் கால்வாய் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இரயில்வே பகுதியில் புதிய கால்வாய் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதுவும் பக்கிள் கால்வாய் உடன் இணைக்கப்படும். அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை.
அதுபோல், சாலை வசதி உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளை முழுமையாக செய்து கொடுப்போம். திமுக ஆட்சிக்கு எப்போதும் நீங்கள் துணையாக இருக்க வேண்டும். வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள், புத்தாண்டு, பொங்கல் பரிசாக கூட நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள், என்று பேசினார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: திமுக என்றால் கலைஞர், தளபதி, உதயநிதி, கனிமொழி என அனைவருடைய பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம். ஒன்றே முக்கால் வருடம் ஆட்சியில் இந்தியா திரும்பி பார்க்கும் வகையில் தமிழகம் முன்னேறியுள்ளது. எல்லா துறைகளிலும் 100 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. கேரளாவை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முன்னேறியுள்ளது. வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் கொரோனா காலக்கட்டத்தையும் தாண்டி வளர்ச்சிப் பாதைக்கு முதலமைச்சர் எடுத்துச் சென்றுள்ளார். இந்த பகுதி மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கனிமொழி எம்.பி.யின் பணியும் சிறப்பாக அமைந்துள்ளது. இதன் மூலம் இந்த பகுதிகளில் உள்ள காலிமனைகளின் விலை உயர்ந்துள்ளது. முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று பேசினார்.


விழாவில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ் மோகன் செல்வின், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மாநகர துணைச் செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துராமன், மகளிரணி நிர்வாகள் ரேவதி, சந்தனமாரி, கவுன்சிலர்கள் ஜான்சிராணி, இசக்கிராஜா, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மகளிரணி துணை அமைப்பாளர் பார்வதி மற்றும் மணி, அல்பர்ட், பிரபாகர், வட்ட செயலாளர்கள் பாலு, ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

க்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிரிட்ஜ், வாஷிங்மிஷின், எல்இடி டிவி வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *