புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு ஒருகால பூஜை திட்டத்தில் ரூ 20 ஆயிரம் வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பிள்ளைப்பாளையம் ஸ்ரீ கழுத்துமுத்து மாரியம்மன் கோவில், ஸ்ரீ பொன்னிமுத்து மாரியம்மன், ஜி.என். பாளையம் ஸ்ரீ குழந்தை முத்து மாரியம்மன் ஆலயம், அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன், கணுவாய்பேட் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம், எஸ்.எஸ். நகர் தேவி முத்து மாரியம்மன், கே.வி. நகர் உலக முத்து மாரியம்மன், கொம்பாக்கம் முத்துமாரியம்மன் ஆலயம் என 8 கோவில்களுக்கு ஒருகால பூஜைக்கான தலா ரூ. 20 ஆயிரத்திற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.

இதில், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமம, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு, கோவில் நிர்வாகத்தினரிடம் ஒருகால பூஜைக்கான அரசின் காசோலைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கோவில் அறங்காவல் நிர்வாகிகள் மற்றும் வில்லியனூர் தொகுதி செயலாளர் இராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, இரமணன், சபரிநாதன், திலகர், முருகன் வெங்கடாசலம், பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *