ஜோ.லியோ.செய்தியாளர்,தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் ஜனவரி 13 அன்று பிறக்கும் அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும்.

டெல்டா மாவட்டங்களில் மிகப் பிரபலமாக இயங்கி வரும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு மருத்துவ சேவைகளை அளித்து வருகிறது, இது தொடர்பாக டாக்டர். எஸ். குருசங்கர் மேலும் கூறியதாவது:- பத்து ஆண்டுகளுக்கு முன்பு அனைவருக்கும் கிடைக்க கூடிய கட்டணத்தில் அவசரநிலை தேர்வுகளுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைக்கான அவசியம் இருந்தது அதுவே 2013ம் ஆண்டு தஞ்சாவூரில் இம்மருத்துவமனையை நாங்கள் நிறுவ காரணமாக இருந்தது. அதைத்தொடர்ந்து, விடாமுயற்சியாலும், மருத்துவ சேவைகளில் தளராத அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்பட்டு, இம்மருத்துவமனையை உயர்நிலைக்கு நாங்கள் எடுத்துச் சென்றிருக்கிறோம். இதன்மூலம் தஞ்சாவூரில் பெருநகரங்களுக்கு நிகரான முதன்மையான மருத்துவ சிகிச்சை வசதி கிடைக்குமாறு செய்ய வெற்றிகரமாக பல நோயாளிகள் இம்மருத்துவமனையை தேடி இங்கு வருவதால், உலகளாவிய சுகாதார வசதிகளிலும் டெல்டா பகுதி இடம்பெறுவதற்கு இது வழிவகுத்திருக்கிறது.

இதய சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு மருத்துவமனையாக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட மீனாட்சி ஹார்ட் கிளினிக், இதயபிரச்சனைகளை அடையாளம் கண்டு சிறந்த சிகிச்சையளிப்பதற்காக 2012-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, உயிர்காப்பு சிகிச்சைக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் பிற வசதிகளுடன் பன்முக சிறப்புப் பிரிவுகள் கொண்ட ஒரு மருத்துவமனையாக மீனாட்சி மருத்துவனை வளர்ச்சி கண்டது. தமிழ்நாடு மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா அவர்கள் 2013, மே 6 அன்று அதிகாரப்பூர்வமாக மீனாட்சி மருத்துவனையை தொடங்கி வைத்தார். இம்மருத்துவமனை முதலில் 50 படுக்கை வசதிகள் கொண்டதாக இருந்தது. மிக நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சாதனங்களோடு இப்போது, இம்மருத்துவமனை 250 படுக்கை வசதிகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனையாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
அதன்படி இம்மருத்துவ மனையின் 10ம் ஆண்டு நிறைவு முன்னிட்டு பொதுமக்களுக்கு 10 அறக்கொடை திட்டங்களை அறிவித்துள்ளது, அதன்படி ஜனவரி 10 முதல் 20 ந்தேதி வரை ஆஞ்சியோகிராம் பரிசோதனை ரூ 10000 என்ற சிறப்பு கட்டணத்தில் கிடைக்கும், பத்து பரிசோதனைகளின் தொகுப்பு ரூ 1000 என்ற சிறப்பு கட்டணத்தில் கிடைக்கும், மற்றும் ஜனவரி 14 அன்று ஒரு நாளுக்கு மட்டும் ரூ 10 என்ற கட்டணத்தில் அனைத்து வெளிநோயாளி பிரிவு மருத்துவ ஆலோசனை கிடைக்கும், மேலும் மருத்துவமனையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள இடங்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் பிக்கப் மற்றும் ட்ராப் வசதி வழங்கப்படும். ஜனவரி 13 அன்று பிறக்கும் அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும், மேலும் ஜனவரி 20 முதல் 30 வரை வெளி நோயாளி பிரிவு சார்ந்த அனைத்து பரிசோதனைகளுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படும், அடுத்த 10 மாதங்களில் பொதுமக்களில் 10000 நபர்களுக்கு அடிப்படை உயிர்காப்பு சிகிச்சை பயிற்சி அளிக்கப்படும் என்று மீனாட்சி மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கர் தெரிவித்துள்ளார், இந்த நிகழ்வில் டாக்டர் பாலமுருகன், டாக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *