உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அவ்வை நகரில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை சமுதாய கூடத்தை அப் பகுதியில் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் சமுதாய நலக்கூடத்தின் சாவியை அங்குள்ள பஞ்சாயத்தில் ஒப்படைக்கும் படி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் சிவக்குமாரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும் அட்லே சாந்தியில் உள்ள 16 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவது சம்பந்தமாக சர்வே அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ., மனு அளித்திருந்தார்.

அதன் நிலை குறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டார். அதற்கு தடையில்லா சான்றிதழ அளித்து விட்டோம் என ஆணையர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நேதாஜி நகர் 3 அறப்பணி அவ்வை தோட்டத்தில் உள்ள பழைய கழிப்பிடத்தை அகற்றி கல்யாண மண்டபம் வர இருக்கும் இடத்தில் வசித்து வரும் 5 குடும்பத்தை அங்கு தங்க வைக்க ஏற்பாடுகள் செய்வதற்காக நகராட்சி கழிப்பிடத்தில் உள்ள இடத்தை பிரித்து கொடுக்கும் படியும் கேட்டிருந்தார். கென்னடி எம்.எல்.ஏ. கோரிக்கையை ஏற்று செய்து தருவதாக நகராட்சி ஆணையர் உறுதி அளித்தார். அப்போது தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில இளைஞர் அணி ராஜி, நேதாஜி நகர் 3 பஞ்சாயத்தார்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *