தூத்துக்குடி மாநகர முத்தையாபுரம் பகுதி திமுக சார்பில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு திமுக பொதுக்கூட்டத்திற்கு பகுதி செயலாளர் மேகநாதன் தலைமை வகித்தார். துணைச்செயலாளர்கள் தங்கசேகர், மனோகர், தமிழ்செல்வி, பொருளாளர் முத்துராஜா, பிரதிநிதிகள் ஜலாலுதீன், தீபக்ரோஸ், ஸ்டாலின், ஆரோக்கியராபின், அய்யப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி மண்டலத்தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, வரவேற்புரையாற்றினார்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் கொள்கை நமது மாவட்டத்தில் 1100 கோடியில் பர்னிச்சர் பார்க் உள்பட 3 பெரிய தொழில்நிறுவனங்கள் வரவுள்ளன. அதன்மூலம் படித்த இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் தமிழகத்தில் 14 ஆயிரத்து 510 கோடியில் புதிய தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மொழி இனம் காக்கப்பட வேண்டும் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5பவுனுக்கு கீழ் உள்ள தங்க நகை கடனும் தள்ளுபடி எல்லாத்துறைகளிலும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது தமிழகம்,

இது போன்று சாதனைகள் திமுக ஆட்சியில் ஏராளம் உள்ளன. பாரதிய ஜனதா கட்சி என்ன சாதனையை செய்தது என்று உங்களால் கூற முடியுமா? கேஸ் மாணியம் கொடுப்பதாக கூறி வங்கி கணக்கு தொடங்க சொல்லி நான்கு மாதத்திற்கு பிறகு எதுவும் வரவில்லை. மினிமம் தொகை இல்லை என்று வங்கி கணக்கு முடிந்து விட்டது பலருக்கு 10 லட்சம் கோடி வராத கடன் என்று தள்ளுபடி செய்து பல தொழிலதிபர்களுக்கு சலுகைகளை செய்த ஒன்றிய அரசு விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யாததால் பல மாதங்களாக போராட்டம் நடத்தினார்கள். கல்வி கடன் தள்ளுபடி செய்யவில்லை. சுங்கசாவடி கட்டணத்தை குறைக்க பலர் போராட்டம் நடத்தினார்கள் ஆனால் கட்டண உயர்வு அதிகரித்தது. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக கூறிய அரசு புதிய தொழில்கொள்கை எதையும் உருவாக்க வில்லை அதற்குமாறாக அரசு சார்ந்த பல நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்தீர்கள் ஏன் தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமணை அமைக்கப்படும் என்று சொன்னதோடு சரி ஓரு செங்கலை வைத்துவிட்டு சென்று விட்டீர்கள்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் ஐஎஸ்டி மூலம் வருமானம் மத்திய அரசுக்கு செல்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்த வருவாயில் தமிழகத்திற்கு தேவையானதை கொடுக்காமல் புறக்கனித்து வருகிறது மத்திய அரசு. பீகார் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் தமிழகத்தில் இருப்பது போல் வளர்ச்சியும் இல்லை பாதுகாப்பும் இல்லை. 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் இருந்த சாதனை இந்தியாவில் எங்கும் இல்லை தமிழர் நலன் தமிழக கலாச்சாரம் என அனைத்தையும் பாதுகாக்கும் வகையில் கலைஞரோடு பயணித்த அன்பழகனாருக்கு புகழ் சேர்க்கும் அரசின் திட்டங்கள் சாதனைகள் அனைத்தும் மக்கள் நலன் கருதி பெரியார் அண்ணா கலைஞர் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

திட்டங்கள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டு அது மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். பொங்கலுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொருட்கள் வழங்கப்படுகிறது. விடுமுறை நாட்களிலும் தலைமை செயலகம் முன்பு பணியாற்றும் முதல்வரை நாம் பெற்றுள்ளோம். அதிமுக பொறுப்பில் இருந்த காலத்தில் மாநகராட்சி பகுதியில் முறையாக பணியும் இல்லை வளர்ச்சியும் இல்லை இந்த பகுதி கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் அரசுக்கு துணை நிற்க வேண்டும். என்று பேசினார்.

மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 19 மாதங்கள் ஆகின்றன. மக்கள் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் பணியாற்றுகிறார். இந்த பகுதியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை யார் ஆட்சியில் வந்தது என்று சிந்தித்து பார்க்க வேண்டும். துறைமுகம் விமான நிலையம் என பல இருந்தும் சிலவற்றை தனியாருக்கு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியின் போது கொண்டு வந்த சேது சமுத்திர திட்டத்தை ராமர் பெயரை சொல்லி தடுத்துவிட்டனர்.

அதிமுகவை பிளவு படுத்தி பிஜேபியை முன்னிலைப்படுத்தி மத்திய அரசு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னமே இல்லாத நிலையை உருவாக்க உள்ளனர். பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு முறையாக பதில் சொல்ல முடியாமல் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற போர்வையில் அண்ணாமலை மிரட்டி பார்க்கிறார். இதற்கெல்லாம் தமிழகத்தில் இருப்பவர்கள் பயப்பட போவதில்லை. அதே போல் கவர்னர் மாநில பெயர் மாற்றம் பிரச்சனையை கிளப்பி பிஜேபியின் ஆதரவாளராக செயல்படுகிறார். இவரும் அவர் வழியில் வந்த ஓரு ஐபிஎஸ் அதிகாரி பொறுப்புக்கு வருகிறவர்கள் வரலாறுகளை தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

9 ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் ஏதுவுமே செய்யவிலை. 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை வீழ்த்த வேண்டும். அதற்கு முதல்வர் வழியில் வியூகம் அமைத்து 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.
துலைமை பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், உள்பட பலர் பேசினார்கள்.

கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ஜான் அலெக்ஸாண்டர், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் கஸ்தூரிதங்கம், உமாதேவி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் சீனிவாசன், ராமர், சின்னத்துரை, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாநகர அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், சிவக்குமார் என்ற செல்வின், பால்ராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரவி, ஜார்ஜ்புஷ், கவுன்சிலர்கள் முத்துவேல், விஜயகுமார், பட்சிராஜ், ராஜதுரை, சுயம்பு, ஜான்சிராணி, மகளிர் அணி நிர்வாகிகள் ரேவதி, சந்தனமாரி, சத்யா, வட்டச்செயலாளர்கள் சுப்பையா, செல்வராஜ், பிரசாந்த், மற்றும் கருணா, ஜோஸ்பர், செந்தில்குமார், லிங்கராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி நன்றியுரையாற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *