கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 6 கூட்டுறவு சங்கங்களில் மூலம் 45 மகளிர் குழுக்கள் பெற்றிருந்த 1.44 கோடி கடன்களை தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது அயநல்லூர், ஈகுவார்பாளையம், மாதரபாக்கம், கும்மிடிப்பூண்டி, பெரிய ஓபலாபுரம், ஆகிய பகுதி யில் உள்ள கூட்டுறவு சங்கங்கள்  மற்றும் கும்மிடிப்பூண்டி காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி என 6 வங்கிகளில் 45 மகளிர் சுய உதவி க் குழுக்களை சேர்ந்த 476 மகளிர் பெற்றிருந்த ரூ 1கோடி44 லட்சத்து 9ஆயித்து 864  கடன் தொகையி னை தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி கும்மிடிப்பூ ண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதி யில் உள்ள லட்சுமி திருமண மண் டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப் பாளர்களாக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், கூட்டுறவு சங்கத் துணை பதிவாளர் ராஜநந்தினி, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் சிவக்குமார், ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி க்கான சான்றிதழ்களை வழங்கினர்.

இதில் கூட்டுறவு சங்கங்கள் சேர்ந்த செயலாளர்களான அயநல்லூர் கலைச்செல்வன், ஈகுவார்பாளையம் திருமலை, மாதரப்பாக்கம் தசரதன், கும்மிடிப்பூண்டி ஞானமூர்த்தி, பெரிய ஓபலாபுரம் சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி மேலாளர் திருமலை, மற்றும் அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை சேர்ந்த செயலாளர்களான மெதூர் சசிகுமார், கவரப்பேட்டை நாகராஜ்,  கோளூர் திருப்பதி, கிருஷ்ணாபுரம் அமிர்தலிங்கம், பொன்னேரி ரூரல் வங்கி பாஸ்கரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *