திண்டுக்கல்லில் வேகமாக பரவும் உன்னி காய்ச்சல் 2 பேர் பலி – மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உன்னி காய்ச்சலால் தற்போது வேகமாக பரவும் நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திஜி நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பலியானார். அதேபோல் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவரும் பலியாகி உள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மட்டும் தற்போது 2 பேர் உன்னி காய்ச்சலால் பலியாகி உள்ளனர். மாவட்ட முழுவதும் சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. சுகாதார துறையினர் பெயரளவு பாதிக்கப்பட்ட நபர்களின் குடியிருப்பு பகுதிகள் அருகே மட்டுமே தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் விரைவாக சுகாதாரத் துறை மூலம் தடுப்பு நடவடிக்கையும், அதே போல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் தற்போது பலவித காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில், தற்போது உன்னி காய்ச்சலும் வேகம் எடுத்துள்ளது. சுகாதார துறையினர் பாதிப்பு அதிகம் இருக்காது என்று கூறி வந்தாலும், தற்போது பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டாலே என்ன காய்ச்சல் என்று பயத்தை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உன்னி காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.
மேலும் சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறும் பொழுது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் புதிய வகை உன்னி காய்ச்சல்“ஸ்க்ரப் டைபஸ் என்ற இந்த காய்ச்சல் ஒரியண்டா சுட்டுகாமோஷி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறி மேலும் அம்மைக்கு வரக்கூடிய சிறுசிறு புள்ளிகள், தோலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அறிகுறியாகவும், வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் மூலமாகவும் பரவும் இந்நோய்க்கு முறையான மருத்துவம் அவசியமாகும். கடைகளில் விற்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.உன்னி காய்ச்சல் என்பது ஒரு வகையான பூச்சி மற்றும் எலிகளால் பரவக்கூடியது என்று சுகாதாரத் துறையின் தெரிவிக்கின்றனர்.
மேலும் மாவட்ட சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *