எஸ்.செல்வகுமார் செய்தியாளர்,சீர்காழி

சீர்காழி அருகே புளிச்சகாடு கிராமத்தில் மாவீரன் சிலம்பாட்ட கழகம் சார்பாக சமத்துவ பொங்கல் திருவிழா. 20 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சிலம்பாட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு. சிலம்பாட்டம்,புலியாட்டம்,வால் வீச்சு, ஆடல்,பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புளிச்சக்காடு கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி தினேஷ் இவர் தனது ஓய்வு நேரத்தில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தமிழர் மரபுக் கலையான சில மக்களை பயிற்றுவித்து வருகிறார் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட கொரோனா தொற்று விடுமுறையில் ஏழை எளிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்தந்த கிராமங்களுக்கே சென்று சிலம்ப கலையை இலவசமாக பயிற்றுவித்து இருந்து வருகிறார்.இந்நிலையில் மாவீரன் சிலம்பாட்ட கழகம் மற்றும் பொதுநல அறக்கட்டளை இணைந்து புளிச்சக்காடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.சீர்காழியை சுற்றியுள்ள கீழச்சாலை, கேவரோடை,புத்தூர்,கொள்ளிடம்,பாதரக்குடி,முதலைமேடு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை 300 சிலம்பாட்ட மாணவ,மாணவிகள்,பெற்றோர் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.

காலை பொங்கல் வைக்கும் வைபவத்துடன் துவங்கிய விழாவில் சிலம்பாட்டம், ஒற்றைகம்பு,இரட்டைகம்பு,புளியாட்டம், வாள்வீச்சி உள்ளிட்ட வீர விளையாட்டுகளும் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பார் லாமேக்,பூம்புகார் தீயணைப்பு நிலைய அதிகாரி ரமேஷ்,பட்டிமன்ற பேச்சாளர் முனைவர்.சத்தியமூர்த்தி,கீழச்சாலை கிராமநலச்சங்க தலைவர் ராஜா,=மற்றும் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் அகோரமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுமாநில அளவில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கி பாராட்டினர்.

இவ்விழாவில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு மகிழ்சியுடன் கொண்டாடினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *