“ஜீவா செந்தில், செய்தியாளர்,

வடலூரில் 25 ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலங்களை பறிக்க துடிக்கும் என்எல்சி .
இந்தியா நிறுவனம் வெளியேற வலியுறுத்தி டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பிரச்சார எழுச்சி நடை பயணம் மேற்கொண்டார்
கடலூர் மாவட்ட மக்கள் வழங்கிய நிலங்களையும் அதில் உள்ள நிலக்கரி வளங்களையும் ஆதாரமாகக் கொண்டு உறுவாக்கப்பட்ட என்எல்சி இந்தியா நிறுவனம், தொடக்கியதில் இருந்து ஆண்டுக்கு கோடிக்கணக்கில்லாபம் ஈட்டும் நிறுவனம், இந்நிறுவனம் தொடங்டு முன்பு, நிலத்தடி நீர் 10 அடியில் இருந்த நிலைமாறி 600, முதல் 700 அடிக்கும் கீழ்நீர் மட்டம் சென்றுவிட்டது, விவசாயம் பாழானது, சுற்றுசூழல் சீர்கெட்டது,

கடலூர் மாவட்டத்தில் 49 கிராமங்களில் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில், மாநில அரசின் உதவியுடன் மாவட்ட நிர்வாகத்தின் துணை உடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது
இதனை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியேற வலியுறுத்தி பிரச்சார நடைப்பயணத்தை மேற்கொண்டார்

வடலூர் ரயில்வே கேட்டிலிருந்து புறப்பட்ட இந்த நடைபயணம் வடலூரில் உள்ள முக்கிய வீதி வழியாக சென்று பின்னர் வடலூர் சபை அருகே நிறைவு பெற்றது
மேலும் வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் டாக்டர் அன்புமணி அவர்கள் பேசுகையில்
கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திகழும், நெய்வேலி நிறுவனத்திற்கு அருகிலுள்ள கிராமங்களில் இருந்து, 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை என்.எல்.சி நிறுவனம் கையகபடுத்தப்படுவதை நிறுத்தப்பட வேண்டும், இப்பகுதி மக்களின் வாழ்வை சீரழித்து விட்டு,நிலக்கரியை வெட்டி எடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என் எல்சி நிர்வாகம் இப்பகுதியைவிட்டு, வெளியேற வேண்டும், இப்பிரச்சினையில்பாட்டாளி மக்கள் கட்சி எப்பொழுதும், இப்பகுதி மக்களுக்கு,துணை நிற்கும், எதிர்கட்சியாக இருக்கும் ஒன்றும், ஆளும்கட்சியான பின் என மாறிமாறி பேசமாட்டோம், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தினர்கள் ஒரு பிடிமண்ணை கூட எடுக்கவிடமாட்டோம், என பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார், இரண்டாவது நாளாக, அன்புமணி ராமதாஸ் நடைபயணம், வளையமாதேவி, கம்மாபுரம், உள்ளிட்ட கிராமங்களில் நடைபயணம்,நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணி மாவட்டஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *