புதுச்சேரி மாநிலம் ஸ்ரீ லட்சுமிநரசிம்ம பெருமாள் ஆன்மீக வழிபாட்டு மன்றம் இன்று 26 ஆம் ஆண்டு புனித பாதயாத்திரை வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது இதில் திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமான் ஸ்ரீ உவே தேவஹலீ ராமானுஜ ஆச்சாரியார் சுவாமிகள் மங்களா சாஸ்திரம்துடன் புதுவையில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் சன்னதியில் இருந்து பாதயாத்திரை புறப்பட்டு கடலூர் பாண்டி சாலை வழியாக வருகை புரிந்து தவளைக்குப்பம் அடுத்துள்ள தமிழக பகுதியான கடலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்கிரி கோயில் ஸ்ரீ லட்சுமிநரசிம்ம திருக்கோவிலிற்கு வந்து அடைந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதில் புதுச்சேரி துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டார் இந்த பாதயாத்திரை யானது காலை 5 மணி முதல் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள், வைணவர்கள், பாகவதர்கள் போன்று பலரும் பாதயாத்திரியின் போது பெருமாள் திருநாமமான நாராயணா கோவிந்தா, நாராயணா கோவிந்தா, என்று கோஷமிட்டு பாதையாத்திரையாக வந்து சிங்கிரிகோவில் உள்ள ஸ்ரீ லட்சுமிநரசிம்ம பெருமாளை வரிசையில் நின்று வணங்கினர் அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் ஜியி யாரிடம்,ஆசிர்வாதம் பெற்று பக்தர்கள் மன மகிழ்ச்சியுடன் சென்றனர். இந்த ஏற்பாட்டினை கோவில் அறங்காவலர் குழு மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர் இதில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்கு ஆய்வாளர்கள் தேவேந்திரன், குருமூர்த்தி, இவர்களின் தலைமையில் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *