திருவொற்றியூர் பெரியார் நகர் மற்றும் ஜோதி நகர் ஆகிய இரண்டு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். தமிழக பாரம்பரிய முறைப்படி பெண்கள் குலவை சத்தமிட்டு பொங்கலோ பொங்கல் என்று கூறியவாறு மகிழ்ச்சியுடன் சமத்துவ பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்

இந்த பொங்கல் விழாவின் போது போட்டிகள் நடைபெற்றன அதில் பெண்கள் வண்ண கோலமிட்டனர் சிலம்பாட்டம் உறி அடிக்கும் போட்டி மற்றும் கயிறு இழுக்கும் போட்டிகள் நடைபெற்றன இந்த போட்டிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு ஆகியவற்றை துணைத் தலைவர் திருமுருகன் வழங்கினார்.

பின்னர் மாட்டு வண்டியில் கரும்புகள் கட்டி அலங்கரித்து தெருக்களில் ஊர்வலமாக வலம் வந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் எம்.மணிகண்டன் நலத்திட்ட பிரிவு தலைவர் கதிர்வேல் பொதுச் செயலாளர் ஜெகதீஷ் மற்றும் செயலாளர் வினோத் குமார் ஆகி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *