திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் வழங்கினர்.

திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம் செல்வராஜ் வழங்கினார்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிடும் பொருட்டு தமிழக முதலமைச்சர் அவர்களால் அரிசி மற்றும் குடும்ப அட்டை தார்களுக்கு தல ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு நீள கரும்பு ரொக்கம் ஆயிரம் ரூபாய் சிறப்பு பொங்கல் தொகுப்பு ஜனவரி ஒன்பதாம் தேதி தமிழக முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்தார்/

அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம் செல்வராஜ் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு நீள கரும்பு ரொக்கம் ஆயிரம் வழங்கும் நிகழ்வு திருவாரூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் 579 முழு நேர நியாய விலை கடை மற்றும் 167 பகுதிநேர நியாய விலை கடைகள் ஆக கூடுதல் 746 நியாய விலை கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மூன்று லட்சத்து 24 ஆயிரத்து 35 மேலும் ஏ ஏ ஒய் 60 ஆயிரத்து 486 ஓ ஏ பி 5591 ஏ என் பி 163 காவலர் குடும்ப அட்டை 861 ஆக மொத்தம் மூன்று லட்சத்தி 91 ஆயிரத்து 136 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட ஏதுவாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 வரை டோக்கன் வழங்கப்பட்டுள்ளது உங்கள் பரிசு தொகுப்புகள் ஜனவரி ஒன்பதாம் தேதி தொடங்கி ஜனவரி பனிரெண்டாம் தேதி வரை காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படும் எனவும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் மாவட்ட ஊராட்சி தலைவர் கே பாலசுப்பிரமணியன் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா இணை பதிவாளர் சித்ரா துணைப் பதிவாளர் கார்த்தி கேசன் துணைப் பதிவாளர் பொது விநியோகத் திட்டம் பாத்திமா மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் குமாரசாமி திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் எஸ் கலியபெருமாள் கூட்டுறவு மொத்த விற்பனை பொது மேலாளர் காளிதாஸ் மேலாளர் காமராஜ் திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் திருவாரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் புலிவலம் தேவா திருவாரூர் நகர மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர் நகர மன்ற உறுப்பினர்கள் வாரை பிரகாஷ் டி செந்தில் ஆசைமணி ராமு உமா மகேஸ்வரி சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்/

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *