உதயசூரியன் செய்தியாளர்,அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் வருகின்ற 16ஆம் தேதி அரசு வழிகாட்டுதலின் பேரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை முன்னிட்டு பேரூராட்சி சார்பில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், பேரூராட்சி மன்ற தலைவர் சுமதிபாண்டியராஜன், செயல் அலுவலர் தேவி, துணை தலைவர் ராமராஜன், மற்றும் கவுன்சிலர்கள் தொடர்ந்து மஞ்சமலை ஆற்றுப்பகுதியில் பார்வையிட்டு கேலரி வர்ணம் பூசும் பணி மற்றும் ஜேசிபி இயந்திர மூலமாக 4 நாட்களாக ஆற்றுப்பகுதியில் சுத்தம் படுத்தும் பணி நடைபெற்றது.

தொடர்ந்து கற்கள் நிறைந்த பகுதி என்பதால் பேரூராட்சி பணியாளர்கள் மூலமாக கற்கள் அகற்றப்பட்டு ஆற்றுப்பகுதி சுத்தமாக வைத்திருப்பதை பார்த்த ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களும் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்..