புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் எழுத்து, ஓவியம்,இசை, நடனம்,  சிலம்பாட்டம், சிற்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு கலை மாமணி விருதுகள் வழங்கும் நிகழ்வு புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலைமாமணி விருது பெற்றவர்களை வாழ்த்து பேசினார்கள். அப்போது பேசிய முதலமைச்சர் ரங்கசாமி: கடந்த ஆட்சியில் எந்தெந்த திட்டங்கள் எல்லாம் கைவிடப்பட்டதோ அந்த திட்டங்களை தாம் பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்தி வருவதாகவும், அது மட்டுமல்லாமல் வாக்குறுதி கொடுத்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றப்படும் என்றார்.

 மேலும் மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு தேவையான நிதிகளை அளித்து வருகிறது
ஆனால் இதையெல்லாம் தெரிந்து சிலர் அரசு மீது குற்றஞ்சாடி வருகின்றனர் என்று கூறிய ரங்கசாமி வருகின்ற காலங்களில் மேடைப் பேச்சாளர்களுக்கும் கலை மாமணி விருதுகள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன : பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது அதாவது விருதுகள் வழங்காமல் காலம் கடத்தியவர்கள் தற்போது காலதாமதமாக விருது வழங்கப்படுவதாக கூறுகிறார்கள்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை வைத்து அரசியல் செய்து வரும் வேலையில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய பாடலையே தமிழ் தாயை வாழ்த்தாக புதுச்சேரியில் பாடுவது நமக்கு எல்லாம் பெருமை சேர்ப்பது என்று குறிப்பிட்டார்.
 புதுச்சேரியை பெஸ்ட்டாக மாற்ற வேண்டும் என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் கனவு ஆனால் நாங்கள் பாஸ்ட் புதுச்சேரியாக மாற்றி வருகிறோம் இதற்கு புதுச்சேரி அரசுக்கு எனது ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு முதல் 21 ஆம் ஆண்டு வரை விண்ணப்பித்த 216 தமிழ் அறிஞர்கள் மற்றும் கலை வல்லுனர்கள் மற்றும் இசை நடனம் ஓவியம் உள்ளிட்ட பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைமாமணி விருதுகளை ஆளுநர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினார்கள். இந்த விருது 50 ஆயிரம் ரூபாய் பொற்க்கிழி மற்றும் விருதுகள் அடங்கியவையாகும்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலை பண்படுத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா எம்எல்ஏ பாஸ்கர்(எ)தட்சணாமூர்த்தி உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் வல்லுனர்கள்  கலை இலக்கியதுறையை சேர்ந்தவர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *