தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை யொட்டி, மதுரை கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட எம். சத்திரப்பட்டியில் இந்த ஜல்லிக் கட்டுப் போட்டி மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டது.

மதுரை அருகே சத்திரப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிபெறும் சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரர் என இரு பிரிவாக பரிசுகள் வழங்கப்பட்டது.முதல் பரிசாககார். 2,3-ம் பரிசுகளாக மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இது தவிர, சிறப்பாக விளையாடும் காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் தலா 1 கிராம் தங்க நாணயம், வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி, சைக்கிள் போன்ற பல்வேறு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்தனர்.