கோவையில் நேஷனல் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில அளவிலான முதலாவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி சின்னவேடம்பட்டி சி.எம்.எஸ்.கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

நேஷனல் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் நந்தகுமார் ஒருங்கிணைத்த,இந்த போட்டியில் திருச்சி,மதுரை,கோவை தஞ்சை, புதுக்கோட்டை உட்பட சுமார் 28 மாவட்டங்களில் இருந்து 1000 த்திற்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,கெயின் ஹோம்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் கணேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

போட்டியில், குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு,மான் கொம்பு,வேல் கம்பு, இரட்டைக் கம்பு,சுருள் வாள், தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டன.ஜூனியர்,சப் ஜூனியர்,சீனியர்,சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளாக . ஒவ்வொருவரின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் நடைபெற்றது..

இந்த போட்டியில் 5 வயது முதல் ஐம்பது வரையிலான போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்புவிழாவில்,விஜய்ராஜ்,சிவக்குமார்,முனியசமி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கங்கள்,கோப்பைகள் வழங்கினர்…இதில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள் அடுத்து நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *