கோவையில் மேற்கு மண்டல அளவிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி கவுண்டம்பாளையம் பென்கிலென் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, தமிழ்நாடு மற்றும் கோவை மாவட்ட ஜூடோ சங்கம் இணைந்து,நடைபெற்றது.. முன்னதாக, பென்கிலென் பள்ளியின் தாளாளர் .ஃபிராங்க் டேவிட் மற்றும் பள்ளியின் இணை தாளாளர் முதல்வர் டாக்டர் அபிஷேக் பால் ஜாக்சன் ஆகியோர் போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள் கூறி போட்டி நிகழ்வுகளைத் தொடங்கி வைத்தனர்.

போட்டிகளில் கோவை ,திருப்பூர் , திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட ஜூடோ சங்க பொதுச் செயலாளர் சென்சாய் பார்த்திபன் தலைமையில் போட்டிகள் நடைபெற்றன.தொடர்ந்து வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சிறப்பு விருந்தினர்களாக பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறைப் பேராசிரியர் டாக்டர் குமரேசன், மாவட்ட உடற்கல்வி இன்ஸ்பெக்டர் டாக்டர் குமரேசன் மற்றும் எஸ்.என்.எஸ். பிசியோதெரபி கல்லூரி முதல்வர் மற்றும் கோவை மாவட்ட ஜூடோ சங்க துணைத் தலைவர் டாக்டர் ராஜ செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று மேற்கு மண்டல ஜூடோ ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையைக் கோவை மாவட்டம் தட்டிச் சென்றது. சர்வதேச நடுவரும் தமிழ்நாடு ஜூடோ சங்கத்தின் பார்வையாளருமான மணிகண்டன் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *