மதுரையில் தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கம், மதுரை ராதாஜெயலட்சுமி அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கும் விழா, ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் விழா, பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்குநலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந் தது.

அறக்கட்டளை தலைவர் திருமுருகன், அவரது மகன் கிருத்திக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மேலும், ஏழை எளிய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கல்வி நிதியை அந்த கல்லூரி, பள்ளி நிர்வாகத்தினரிடம் வழங்கினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த அரசு பள்ளி- தலைமை ஆசிரியை ராதா ஜெயலட்சுமி நினைவாக, ஆதரவற்றவர்கள் 300 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

மேலும், 1 லட்சம் விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. ஏராளமான இடங்களில் மரங்களும் நடப்பட்டுள்ளன என்றனர். முன்னதாக, சிந்தாமணி பகுதியில் உள்ள மதுரை பாண்டியன் அப்பள நிறுவனத்தில், ராதா ஜெய லட்சுமி நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் , அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ராதாஜெயலட்சுமி உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *