நாமக்கல்

நாமக்கல் – சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆர் நகரில் ( நாமக்கல் இரயில் நிலையம் அருகில்) தங்காயி மற்றும் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை பஞ்சமி திதி அன்றுசிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.

அதன் படி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தயிர், குங்குமம், இளநீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து வாராஹி அம்மன் வெள்ளி கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்க அம்மனுக்கு தீபாரதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தங்களது பிரார்த்தனை நிறைவேற முழு தேங்காய் உடைத்து பாதி இரண்டு தேங்காயில் நெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு செய்தனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *