தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் அமரர் பி.டி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பைக்கான 62 ஆவது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி இன்று துவங்கியது

பெரியகுளம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் கொடியேற்றி விளையாட்டு வீரர்களை அறிமுகம் செய்து கூடைப்பந்தாட்ட போட்டி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து முதலாவது நாளான இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்லி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் உடுமலைப்பேட்டை கூடைப்பந்தாட்ட கழக அணியும் விளையாடியதில் பெரியகுளம் சில்வர் ஜூப்லி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 67 க்கு 49 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.

மேலும் இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் போடிநாயக்கனூர் கூடைப்பந்தாட்ட அணியும் திருநெல்வேலி கூடைப்பந்தாட்ட அணியும் மூன்றாவது போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்லி ஸ்போர்ட்ஸ் கிரீஸ் அணியும் திண்டுக்கல் கூடைப்பந்தாட்ட கழக அணியும் நான்காவது போட்டியில் சென்னை TNBA TRW அணியும் கம்பம் பென்னிகுவிக் கூடைப்பந்தாட்ட அணியும் களத்தில் விளையாட உள்ளனர் .

மேலும் இந்த போட்டியானது நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற உள்ளது இதில் இந்தியாவில் தலைசிறந்த அணிகளான இந்திய கப்பல் படை அணியும் இந்திய விமானப்படை அணியும் இந்திய எண்ணெய் எரிவாயு கழக அணியும் பேங்க் ஆப் பரோடா பெங்களூர் அணி உள்ளிட்ட 21 அணிகள் இந்தக் கூடைப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இன்று துவங்கிய இந்த கூடைப்பந்தாட்ட போட்டியானது வருகிற 21 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது இந்த போட்டியானது பகல் மற்றும் இரவு மின் ஒளியில் நடைபெறுகிறது.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுகின்ற அணிகளுக்கு முதல் பரிசு 50.000 ரூபாய் ரொக்க பரிசும் சுழற் கோப்பையும் இரண்டாவது பரிசு 40.000 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழற் கோப்பையும் மூன்றாவது பரிசு 30.000 ரூபாய் மற்றும் சுழற் கோப்பையும் நாலாவது பரிசு 20.000 ரூபாயும் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது. மற்றும் இந்த கூடை பந்தாட்ட போட்டியில் தொடரின் சிறந்த விளையாட்டு வீரராக தேர்ந்தெடுக்கப்படும் வீரருக்கு தேனி அருண் மோட்டார் சார்பாக இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்த போட்டியை காண்பதற்காக தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடைப் பந்தாட்ட ரசிகர்கள் விளையாட்டுப் போட்டியை காண்பதற்காக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சில்வர் ஜூப்லி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இந்த போட்டிக்கான முன்னேற்பாடுகளை செய்து தொடர்ந்து 62 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 62 ஆண்டுகளாக சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அகில இந்திய அளவில் கூடை பந்தாட்ட போட்டி நடத்தி வருவதால் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தொடர்ந்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *