எஸ்.செல்வகுமார். செய்தியாளர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வானகிரி மீனவ கிராமத்தில் எல்லையம்மன் கபடி கழகம் சார்பாக 40 ஆம் ஆண்டு தென்னிந்திய அளவிலான கபடி தொடர் போட்டிகள் இன்று துவங்கியது இரண்டு நாட்கள் நடைபெறும்

இப் போட்டியில் சென்னை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து 60 க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர் இரவு பகலாக நடைபெறும் இப் போட்டியை மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.எம்.முருகன் துவக்கி வைத்தார்
இப் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் மணிக்கு ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் 30000 மதிப்புள்ள கேடயமும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணியிருக்கு ரூபாய் 90 ஆயிரம் ரொக்க பரிசும் 20 ஆயிரம் மதிப்பிலான கேடயமும், மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய் 60 ஆயிரம் ரொக்க பரிசும் 15 ஆயிரம் மதிப்பிலான கேடயமும் வழங்கப்பட உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை வானகிரி மீனவ பஞ்சாயத்தார் இ.சி.ராஜா தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர். விழாவில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திருவள்ளூர் கலந்து கொண்டனர்