வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம் ஊராட்சி சின்னகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம் ஊராட்சி சின்னகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா தொடங்கியது. கடந்த 12-ந்தேதி வெள்ளி கிழமை காலை சிறப்பு அபிஷேக ஆராதனைமற்றும் இரவு 10-மணிக்கு அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சியும், 13-ந்தேதி காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் இரவு 10- மணிக்கு சக்கரவாணி கோட்டை பிடிப்பது நிகழ்ச்சியும், 14-ந்தேதி காலை சிறப்பு அபிஷேக ஆராதனைமற்றும் இரவு 9-மணிக்கு திருவலஞ்சுழி பட்டாபிராமன் குழுவினரின் அரவான் களில் நாடகமும், 15-ந்தேதி திங்கட்கிழமை காலை 9-மணிக்கு சக்தி கரகம் எடுத்து, தீ போடுதல், காலை 11-மணிக்கு காவடி எடுத்தல், மதியம் 12-மணியளவில் கூந்தல் முடிதல் நிகழ்ச்சியும் மாலை 6-மணியளவில் தீமிதி திருவிழாவும், இரவு 7-மணியளவில் மாருதி சிலம்பாலாயம் யூனிவர்சிட்டி ஸ்போர்ட்ஸ் அகடமி சிலம்பக்கலை மூத்த ஆசான் கே. ராஜா மணிகண்டன், துணை ஆசான் ஜி. ரம்யா இணைந்து வழங்கும் சிலம்பாட்டமும், அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதமும் வழங்கப்பட்டது.

இரவு 9-மணிக்குஆலயத்தின் எதிர்புறமுள்ள நால்வர் நாடக கலையரங்கில் வலங்கை . ரெயின்போ சேகர் வழங்கும் பாரத் மெலோடியஸ் ஆர்க்கெஸ்ட்ரா வின் திரைப்பட தெம்மாங்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சின்னகரம் கிராம வாசிகள், வாணவேடிக்கை நிகழ்ச்சி ஏற்பாடுகளை விருப்பாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா சிவகுமார் சிறப்பாக செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed