தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட பிரிவு சார்பாக கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் கடந்த 04/05/ 2023 முதல் 18/05/2023 வரை சிறுவிளையாட்ட அரங்கம் ஜோலார்பேட்டையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.இதில் கால்பந்து தடகளம் கபடி கையுந்த பந்து கூடைப்பந்து விளையாட்டுகளுக்கு தளம் 30 மாணவ மாணவிகள் வீதம் மொத்தம் 150 வீரர் வீராங்கனை கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.கோடைகால பயிற்சி நிறைவு விழாவில் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்ற அனைத்து வீராங்கனைகளுக்கு சான்றிதழ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் வாழ்த்துரை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிற விழாவில் ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர் அவர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *