அதிமுக ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

இதில் சேலத்தில் மாநாடு நடத்துவது குறித்தும் அதில் பங்கேற்பது குறித்தும் ஓபிஎஸ் அணியின் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும் எடுத்துரைத்தனர்

முன்னதாக சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சருமான வைத்தியலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

அப்பொழுது வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அதிமுக ஒன்றிணைய வேண்டும் அப்பொழுது தான் 40 தொகுதிகளும் வெற்றி பெற முடியும் இல்லை என்றறால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது தற்போது எடப்பாடி அணியில் இருப்பவர்களும் இதை சிந்திக்க தொடங்கி விட்டனர்.

இணைப்பிற்கு எடப்பாடி ஒத்து வந்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு செய்யும் நன்றி கடன், இல்லையென்றால் அவரை , எடப்பாடி பழனிச்சாமியை ஒதுக்கிவிட்டு அதிமுகவை ஒன்று சேர்ப்போம்.சேலத்தில் நேற்று ஏற்பட்ட மோதல் குறித்து கேட்டபோது எங்கள் தொண்டர்களுக்கு ஒரு சொட்டு ரத்தம் வந்தால், அவர்கள் மீது 10 சொட்டு ரத்தம் வரும்,

2000 ரூபாய் நோட்டு திரும்ப பெற்றது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றால் அதை நாங்கள் வரவேற்கிறோம்,முன்னாள் அமைசார் காமராஜ் திமுகவில் இருந்து அதிமுக வந்தவர் பதவிக்காக யாரின் காலில் வேண்டுமானலும் விழுவார்,பதவிக்காக யார் கால்களிலும் நாங்கள் விழுந்தது இல்லை என வைத்தியலிங்கம் தெரிவித்தார்

அப்போது ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், சேந்தமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி. சந்திரசேகரன் நாமக்கல் கிழக்கு மாவட்ட ஓபிஎஸ் அதிமுக அணி மாவட்ட செயலாளர் என் பி எஸ் (எ) நாமக்கல் எம். பழனிசாமி, நாமக்கல் தெற்கு நகர செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

அதைத் தொடர்ந்து நாமக்கல் மோகனூர் சாலையில் இருக்கும் இளங்கோ திருமண மண்டபத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட ஓபிஎஸ் அணி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

அதிலும் வைத்தியலிங்கம் எம்எல்ஏ, ஜே.சி.டி.பிரபாகரன் மனோஜ் பாண்டியன், முன்னாள் எம். எல். ஏ. , சி. சந்திரசேகரன்,
என்.பி.எஸ் (எ) நாமக்கல் எம் பழனிசாமி உள்ளிட்ட பலர் பேசினார்கள்

அதை தொடர்ந்து குமாரபாளையத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று அடுத்து ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த சென்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *