தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விஷச் சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்த நிலையில் இன்னும் பலா் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி வரும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதால் கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தார். இந்த நிலையில் மேலும் ஒரு சம்பவமாக தஞ்சாவூர் டாஸ்மாக் பாரில் மது குடித்த குப்புசாமி, குட்டி விவேக் ஆகிய 2 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கள்ளச்சாராயத்தால் பலர் பலியாகி வருவதை கண்டதும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுக்க போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை, பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக அறிவித்து இருந்தார். இதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார்.

அதன்படி இன்று காலையில் சைதாப்பேட்டை சின்னமலை அருகே பல்லாயிரக்கணக்கில் அ.தி.மு.க.வினர் திரண்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி வந்ததும் கவர்னர் மாளிகை நோக்கி கண்டன பேரணி புறப்பட்டது. இதில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், தலைமைக் கழக நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை, விஜயபாஸ்கர், டி.கே.எம்.சின்னையா, செல்லூர் ராஜூ, பா.வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், ரமணா, மாதவரம் மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், வெங்கடேஷ் பாபு, சத்தியா, ராஜேஷ், வேளச்சேரி அசோக், ஆதிராஜாராம், கே.பி.கந்தன், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளரான பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், அமைப்புச் செயலாளர் நெல்லை ஏ.கே.சீனிவாசன், கழக வர்த்தக அணி இணைச் செயலாளரான முன்னாள் சாத்தாங்குளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஏ.எம்.ஆனந்தராஜா, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில துணைச் செயலாளர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி எம்.சி. ஆயிரம் விளக்கு 117-வது வட்ட கழகச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் சின்னையன் (எ) ஆறுமுகம், வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, மாணவரணி வக்கீல் ஆ.பழனி, முகப்பேர் இளஞ்செழியன், சைதை சொ.கடும்பாடி செக் போஸ்ட் எஸ்.வி.லிங்க குமார், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், பகுதி செயலாளர் ஜெ.ஜான், கே.பி.முகுந்தன், சி.வி.மணி, கொளத்தூர் முன்னாள் பகுதி செயலாளர் கொளத்தூர் கே.கணேசன் திருமங்கலம் மோகன், அபிராமி பாலாஜி, பாடி பா.கிருஷ்ணன், அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் புரசை வி.எஸ்.பாபு, துறைமுகம் பயாஸ் இளைய கிருஷ்ணன், புளியந்தோப்பு எம்.ஆர்.சந்திரன், பகுதி கழக செயலாளர் பட்மேடு டி.சாரதி, ஜி.ஆர்.பி.கோகுல், கே.சி.கார்டன் சந்திரசேகர், நேரு நகர் எஸ்.கோதண்டன் வழக்கறிஞர் இஸ்மாயில், கொளத்தூர் கணேசன், எஸ்.ஆர்.விஜய குமார், வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் எம்.பாலாஜி உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *