தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் அமரர் பி.டி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பைக்கான 62 வது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி கடந்த 15ம் தேதி துவங்கியது. இப்போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்று அதில் வெற்றி பெற்ற அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி பெற்று கடந்த இரண்டு நாட்களாக லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றது.

இந்நிலையில் லீக் போட்டிக்கு
நான்கு அணிகள் தகுதி பெற்று லீக் போட்டிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து லீக் போட்டிகளில் புள்ளிகளின் அடிப்படையில் இறுதி போட்டி மற்றும் மூன்று , நான்காம் இடத்திற்கான போட்டிகள் நடைபெற்றது.

இதில் நடைபெற்ற முதல் போட்டியாக மூன்று மற்றும் நான்காம் இடத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில் பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணியும் புதுடெல்லி இந்திய விமானப்படை அணியும் மோதியதில் 74 க்கு 62 என்ற புள்ளிகள் அடிப்படையில் புதுடெல்லி இந்திய விமானப்படை அணி வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை பெற்றது. நான்காவது இடத்தை பெங்களூர் பேங்க் ஆப் பரோடா அணி பெற்றது.

இதனைத் தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் இடத்திற்காக நடைபெற்ற இறுதிப்போட்டியில் லோனாவாலா இந்திய கப்பற்படை அணியும் புனே கஸ்டம்ஸ் அணியும் மோதியதில் 92க்கு 86 என்ற புள்ளி கணக்கில் லோனாவாலா இந்திய கப்பற்படை அணி வெற்றி பெற்று முதல் இடத்தை தட்டிச் சென்றது இரண்டாவது இடத்தை புனே கஸ்டம்ஸ் அணி பெற்றது.

கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற லோனோ வாலா இந்திய கப்பற்படை அணிக்கு முதல் பரிசாக 50.000 ரூபாய் மற்றும் அமரர் பிடி சிதம்பர சூரிய நாராயணன் சுழற் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தைப் பிடித்த புனே கஷ்டம்ஸ் அனிக்கு பரிசாக 40.000 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழற் கோப்பையும் மூன்றாவது இடத்தைப் பிடித்த புது டெல்லி இந்திய விமானப்படை அணிக்கு பரிசாக 30.000 ரூபாய் மற்றும் சுழற் கோப்பையும் நான்காவது இடத்தை பிடித்த பெங்களூர் பேங்க் ஆப் பரோடா அணிக்கு பரிசாக 20.000 ரூபாய் மற்றும் சிலர் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

இந்த கூடை பந்தாட்ட போட்டியில் தொடரின் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்ட இந்திய கப்பற்படை அணியைச் சேர்ந்த மந்திப் சிங் என்ற வீரருக்கு ஹீரோ தேனி அருண் மோட்டார் சார்பாக இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் அமரர் பிடி சிதம்பரம் சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பை காண 62 ஆவது அகில இந்திய கூடைடிப்பந்தாட்ட போட்டியை காண தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் கூடைப்பந்தாட்ட ரசிகர்கள் விளையாட்டுப் போட்டிகளை கண்டு களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *