உலகளவில் முதன்முறையாக கோவையில் பிரபல இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நேரடி மாபெரும் இசை நிகழ்ச்சி மே 27ல் கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது

கோடையை மறந்து குதூகளிக்க இசைப்பிரியர்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பு!

இந்நிகழ்ச்சி குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் எம்.கே என்டர்டைன்மென்ட் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் கூறுகையில் ,
கோவையில் வரும் மே 27ஆம் தேதி பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ இசை கச்சேரி கொடிசியா மைதானத்தில் மாலை 6:00 மணி முதல் பிரம்மாண்டமாக நடத்த உள்ளோம்.

எம்.கே. என்டர்டெயின்மென்ட், அன்னபூர்ணா மசாலா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த நேரடி இசை நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்த உள்ளோம்.

2006ம் ஆண்டு ‘வெயில்’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஜிவி பிரகாஷ் பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், ராஜா ராணி, அசுரன், சூரரைப் போற்று, வாத்தி போன்ற வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

‘ வெயிலோடு விளையாடி’, ‘ உன் மேல ஆசைதான்’, ‘ பூக்கள் பூக்கும் தருணம்’, ‘ யாத்தே யாத்தே’, ‘ ஆரிரோ’, ‘ ஹே பேபி’ , ‘ வா வாத்தி’, போன்ற பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்வேதா மோகன், ஹரிணி, சைந்தவி, திப்பு திவாகர், சத்திய பிரகாஷ், வேல்முருகன், மற்றும் பலர் பாட உள்ளனர். பிரபல நடன இயக்குனர் சன்டி குழுவினர் நடனமாடுகின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்,கன்னடம், ஆகிய மொழிகளில் இருந்து முக்கிய திரை பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.

ஜி.வி. பிரகாஷ் கூறுகையில்

முதல் லைவ் நிகழ்ச்சி கோவையில் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2006″ல் இருந்து இசை அமைத்து வருகிறேன்.கோவையில் நடைபெறும் இசை நிகழ்ச்சி சிறப்பான நிகழ்வாக இருக்கும். ரெக்கார்டிங்கில் இருந்து நேரடியாக இசையமைப்பது எதிர்பார்பாக உள்ளது. இந்த நிகழ்வில் 40-45 பாடல்கள் பாடப்பட உள்ளன. லைவ்வில் சினிமாவில் கேட்டதை விட சிறப்பு இருக்கும். அதிகபட்சமாக தமிழ் பாடல்கள் பாடுவோம் ,என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை பே.டி.எம் இன்சைடர், ஸ்போர்பி மற்றும் புக் மை ஷோ செயலிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டிக்கெட் தொடர்பான விவரங்களுக்கு:- 7826836672 / 7826836670

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *