விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே .எஸ்.மஸ்தானை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி பாமகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்ய தாக தொடர்பாக திண்டிவனம் நகரில் உள்ள 20-வது வார்டு பெண் நகர மன்ற உறுப்பினரின் கணவரான மரூர் ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மரூர் ராஜாவுக்கு அமைச்சர் செஞ்சி கே .எஸ்.மஸ்தான் ஆதரவாக செயல்பட்டதாக சமூக வலைதளங் களில் தகவல் பரவியது.மேலும் அமைச்சரின்
செய்தியாளர் சந்திப்பில் மரூர் ராஜா பா.ம.க. நிறுவ னர் டாக்டர் ராமதாஸ் மற் றும் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரின் உறவினர் என தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் திண்டிவ னம் நகரில் உள்ள தீர்த்தகுளம் எல் கே டவரில் நடைபெறும் தி.மு.க. செயற் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு கருப்பு கொடி காட்டப்படும் என பா.ம.க.வினர் தெரிவித்திருந்த சூழ்நிலையில்

பாம.க. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெய ராஜ் தலைமையில் திண்டிவ னம் ஆர்.எஸ்.பிள்ளை வீதி யில் அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது அவ தூறு பரப்பிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறி கையில் கருப்பு கொடி ஏந்தி தி.மு.க. செயற் குழு கூட்டம் நடைபெற இருந்த தீர்த்தகுளம் பகுதிக்கு ஊர்வலமாக சென்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் பா.ம.க.வினரை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அனுமதி யின்றி ஆர்ப்பாட்டம் நடத் தியதாக கூறி பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

இதில், நகர செயலாளர் பூதேரி ராஜேஷ்,மாவட்டத் தலைவர் பாவாடை ராயன்,முன்னாள் மாநிலத் தலைவர் N.M.கருணாநிதி,முன்னாள் மாவட்ட செயலாளர் இரா. சம்பத்,மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ஆறுமுகம்,வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நொளம்பூர் முருகன்,மாவட்டத் துணைச் செயலாளர் சலவாதி சேகர்,வன்னியர் சங்க நகர செயலாளர் பூதேரி ரவி, நகர செயலாளர் சண்முகம்,பாமக நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன்,மகளிர் அணி பொன். மகேஸ்வரி,நகர இளைஞரணி செயலாளர் பிரசாந்த்,நகர மாணவரணி செயலாளர் மற்றும் பாமக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *