புதுச்சேரி அரசு மீன்வளத்துறை அமைச்சர்‌ அலுவலகம்‌ விடுத்துள்ள செய்திக்குறிப்பு
புதுச்சேரி அரசின்‌ மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையின்‌ மூலம் முதியோர்‌
ஓய்வூதியம்‌ வேண்டி புதியதாக விண்ணப்பித்த சுமார்‌ 1086 மீனவ முதியோர்களுக்கு
மார்ச்‌ மாதம்‌ 2023 முதல்‌ பிப்ரவரி மாதம்‌ 2024 வரையிலான 12 மாதங்களுக்கு
தேவையான ஓய்வூதிய தொகையான ரூபாய்‌ 3.30 கோடிக்கு அரசின்‌ ஒப்புதல்‌ அளிக்கப்பட்டு செலவின ஒப்புதல்‌ வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்‌ மீனவ முதியோர்களுக்கு ஒய்வூதியம்‌
வழங்கும்‌ நிகழ்ச்சியினை சட்டப்பேரவை தலைவர்‌ . ஏம்பலம்‌ செல்வம்‌ மற்றும்‌ மீன்வளத்துறை அமைச்சர்‌ லட்சுமிநாராயணன்‌ முன்னிலையில்‌ முதலமைச்சர்‌ ரங்கசாமி இன்று(25.05.2023) துவக்கி வைத்தார்‌.

இப்புதிய மீனவ முதியோர்களுக்கு மார்ச்‌ மற்றும்‌ ஏப்ரல்‌ மாதத்திற்கான
ஓய்வூதிய தொகையானது இந்நிகழ்ச்சிக்கு பிறகு அவரவர்‌ வங்கிக்‌ கணக்கில்‌ விரைவில்‌செலுத்தப்படும்‌. மேலும்‌. புதுச்சேரி மாநிலத்தில்‌ மொத்தமுள்ள 9202 (புதியதாகதேர்ந்தெடுக்கப்பட்ட 1086 நபர்களையும்‌ சேர்த்து) மீனவ முதியோர்களுக்கு
மாதந்தோறும்‌ ஓய்வூதியம்‌ தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக நமது புதுச்சேரி
அரசானது முதன்‌ முறையாக நடப்பு நிதியாண்டில்‌ மார்ச்‌ மாதம்‌ 2023 முதல்‌ பிப்ரவரி
மாதம்‌ 2024 வரையிலான மொத்தம்‌ 12 மாதங்களுக்கு ரூ.30,95,58,000/- ஒதுக்கீடு
செய்து செலவின ஒப்புதல்‌ வழங்கப்பட்டுள்ளது.

இதனால்‌ புதுச்சேரி மாநில மீனவ முதியோர்கள்‌ அனைவருக்கும்‌ ஒவ்வொரு
மாதத்தின்‌ முதல்‌ வாரத்திலேயே அவர்களுக்கான ஓய்வூதியம்‌ அவர்களது வங்கி
கணக்கில்‌ தவறாது செலுத்தப்படும்‌.

ஏற்கனவே ஓய்வூதியம்‌ பெற்று வரும்‌ நமது புதுச்சேரி மாநில மீனவ
முதியோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கான அதாவது மார்ச்‌ மற்றும்‌ ஏப்ரல்‌
மாதங்களுக்கான ஓய்வூதியத்‌ தொகை அவரவர்‌ வங்கி கணக்கில்‌ கடந்த திங்கட்கிழமை(22.05.2023) முதல்‌ செலுத்தப்பட்டு வருகிறது என்று இதன்‌ மூலம்‌ தெரிலித்துக்‌ கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில்‌ புதுவை பகுதியின்‌ பல்வேறு மீனவ கிராமங்களை உள்ளடக்கிய
சட்டமன்ற உறுப்பினர்கள்‌ பாஸ்கர்‌(எ) தட்சிணாமூர்த்தி, செந்தில்குமார்‌.
பிரகாஷ்குமார்‌, கல்யாணசுந்தரம்‌, மீன்வளத்துறை செயலர்‌
வல்லவன்‌ மீன்வளத்துறை இயக்குனர்‌ பாலாஜி, இணைஇயக்குனர்‌ தெய்வசிகாமணி மற்றும்‌ துறை அதிகாரிகள்‌ கலந்து கொண்டனர்‌.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *