வலங்கைமான் அருகில் உள்ள லாயம் பகுதியில் குடமுருட்டி ஆற்றில் படித் துறை அமைத்து தர பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி 1-வது வார்டு லாயம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் சமூககத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அருகில் உள்ள குடமுருட்டி ஆற்றில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக படித் துறை அமைக்கப்பட்டது.

இந்த படித்துறையானது , தற்போது முற்றிலும் சிதிலமடைந்து மக்கள் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே அப்பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த படித்துறையினை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக படித் துறை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *