எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டநாத சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ திருநிலை நாயகி சமேத ஸ்ரீ பிரம்மபுரிஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் பெருவிழா பூர்த்தி அடைந்தபிறகு காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பக்தர்கள் பயன்படுத்தி திருகோயில் உள் பிரகாரத்தில் போடப்பட்ட தாள்கள், டீ கப், வாட்டர் பாட்டில், தொன்னை, பேப்பர் பிலேட், பிளாஸ்டிக் கவர்கள், மற்றும் அனைத்து வகை குப்பைகளை சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம்

என்.எஸ்.எஸ் மாணவர்களுடன் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரும் உடற்கல்வி இயக்குனருமான எஸ்.முரளிதரன் தலைமையிலும் மற்றும் புத்தூர் பி.எஸ்.பி.டி.எம்.ஜீ.ஆர் அரசு கலை கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவ மற்றும் மாணவிகள் என 30திற்க்கும் மேற்பட்ட சேவை மாணவர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்திற்கு பிறகு தூய்மை செய்யும் பணி மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சினை சண்டிகேஸ்வர நாயனார் நற்பணிச் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் சம்பத் கணேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் சேவை மேற்கொள்ளப்பட்டது. சீர்காழி காவல் துறை ஆய்வாளர் சிவக்குமார் சேவை பணியினை துவக்கிவைத்தார்கள், அரசு மருத்துவமனை மருந்தாலுனர் முரளி வாழ்த்து கூறினார். இந்து முன்னனி மாவட்ட தலைவர் சரண்ராஜ், வேதா பிள்ளை, விஜயாலயன், ஹூரோவினோத் ஆகியோர் சேவை செய்த மாணவ, மாணவிகளுக்கு டி ஷர்ட், சிற்றுண்டி, கையுறை, முகக்கவசம், தூய்மை பணிக்கான பைகள் வாங்கிக்கொடுத்து சேவையிலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக சம்பத் கணேஷ் நன்றி கூறினார்.