எஸ்.செல்வகுமார். செய்தியாளர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை விமர்சையாக நடந்துமுடிந்தது. கும்பாபிஷே பணிகளை முன்னின்று மேற்கொண்டு நடத்தி முடித்திட தருமபுரம் ஆதீனம் 27}ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தருமபுரம் திருமடத்தில் வைத்து பூஜைசெய்துவரும் பூஜா மூர்த்தியான சொக்கநாதர் பெருமானுடன் கடந்த 11}ம் தேதி குரு லிங்க சங்கம பாதயாத்திரையாக புறப்பட்டு 15}ம் தேதி சீர்காழி நகர எல்லை வந்தடைந்தார். சீர்காழியில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு யானை,ஒட்டகம்,குதிரை முன்னெசெல்ல ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்து கும்பாபிஷேக பணிகளை சிறப்பாக நிறைவு செய்தார். இதனிடையே தருமபுரம் ஆதீனம் குரு லிங்க சங்கம வெற்றிவேல் யாத்திரையாக சொக்கநாதர் பெருமானுடன் மீண்டும் தருமபுரம் புறப்பட்டார்.சட்டைநாதர் சுவாமி கோயிலிருந்து சொக்கநாதர் பெருமானை சுமந்து தம்பிரான் சுவாமிகளுடன் புறப்பட்ட தருமை ஆதீனத்திற்கு வீதிதோறும் பூர்ண கும்ப மரியாதையும், பாதஅபிஷேகமும் செய்து பக்தர்கள் வழிப்பட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *