தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்துறை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, எம்எல்ஏக்கள் தேவராஜ் நல்லதம்பி வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு 3152 பயனாளிகளுக்கு 8 கோடியே 69 லட்சத்து 18 ஆயிரத்து 647 ரூபாய் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா, ஆதரவற்ற விதவை சான்றிதழ், சாதி சான்றிதழ், தையல் இயந்திரம், விவசாய கடன், பத்திரிகையாளர்களுக்கு நல வாரிய அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இதில் திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை, திருப்பத்தூர் சப் கலெக்டர் லட்சுமி, மாவட்ட சேர்மன் சூரியகுமார், மாவட்ட ஆவின் தலைவர் எஸ் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பயனாளிகள் ஆளும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.