மாதவரம் பகுதியில் கள்ள சந்தையில் விட்டதாக ஆய்வாளர் சிவகுமாருக்கு ரகசிய தகவல் வந்தது அதன் அடிப்படையில் மாதவரம் காவல் நிலைய சிறப்பு தனிப்படை போலீசார் அம்பேத்கார் நகர் திருவள்ளூர் தெருவில் மதுபாட்டில்களை அதிகாலையில் அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்த இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கங்காதரன் (வயது 45) பழனி (வயது 59) என்பவர்கள் இடமிருந்து 92 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் அவர்கள் இருவரின் மேல் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தார்.
