பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் சு கல்யாணசுந்தரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12.55 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் சுற்றுச்சுவர் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர்கள் சு கல்யாணசுந்தரம் எம் சண்முகம் ஆகியோர் பங்கு பெற்று அடிக்கல் நாட்டினர்.
இப்பள்ளியின்பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு வி எஸ் செல்வராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள்உள்ளூர் பிரமுகர்கள்கலந்து கொண்டனர்.
மேலும் இப்பள்ளியில் 12 – ஆம் வகுப்பு மற்றும் 10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கி ஊக்குவித்தனர் ..