பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் 1973 ஆம் ஆண்டு மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பி.எஸ்.ஜி.தொழில்நுட்ப கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

அலுமினி அசோசியேஷன் முன்னால் தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,சிறப்பு விருந்தினர்களாக முன்னால் முதல்வர் பிரகாசம் பேட்ரன்,பி.எஸ்.ஜி.பாலிடெக்னிக் முதல்வர் கிரிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகள் கழித்து தங்கள் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். சிலர் அவரவர் கடந்து வந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னால் மாணவர்களும் தாங்கள் பயின்ற இந்த கல்லூரி எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அங்கமாக இருப்பதாகவும்,இந்த கல்லூரியில் பயின்றதால், அரசு அதிகாரிகளாகவும், சுய தொழில் செய்பவர்களாகவும்,, பொறியாளராகவும் இருந்த்தாக பெருமையுடன் தெரிவித்தனர்..
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் கிட்டான்,ரவிச்சந்திரன், செல்வராஜ்,சுரேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *