விழுப்புரம் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது.

திண்டிவனம் நகரில் உள்ள தீர்த்தக்குளம் பகுதியில் எம்.ஆர்.எஸ் லஷ்மி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் மீன் சேகர் (எ) குணசேகரன் வரவேற்றார்.விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் A.D.ராஜேந்திரன்,மாநில செயற்குழு உறுப்பினர் லிங்கம்,மாநிலத் திட்ட பொறுப்பாளர் கௌரிசங்கர்,மாவட்ட பொதுச் செயலாளர் சுந்தர்,மாவட்ட பொருளாளர் கலையரசி,மாவட்ட பொதுச் செயலாளர் எத்திராஜ், பாண்டியன்,மாவட்ட பொருளாளர் சத்யநாராயணன்,வர்த்தக பிரிவு மாநில துணைத்தலைவர் ஜின்ராஜ்,தொழில் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் கோபிநாத்,மாவட்டத் துணைத் தலைவர் ராதே கோகுல் திண்டிவனம் நகர தலைவர் வெங்கடேச பெருமாள் முன்னிலை வகித்தனர். விவசாய அணி மாவட்ட தலைவர் குட்டியாண்டி தலைமை தாங்கினார் விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் விவசாய அணியின் மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன்,மாநிலத் துணைத் தலைவர் ரமேஷ் கோவிந்த்,மாநில செயலாளர் வெங்கடாசலம்,மாவட்டத் துணைத் தலைவர்கள் சீனுவாசன் சரவணன் மாவட்ட செயலாளர்கள் மோகன், தமிழரசன், ஏழுமலை,விவசாயியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திண்டிவனம் நகர மரக்காணம் மயிலம் ஒலக்கூர் செஞ்சி மண்டல தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.இறுதியாக விவசாய அணியின் மாவட்ட செயலாளர் ஹேமநாதன் நன்றி கூறினார்.