பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

ஜெயங்கொண்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் நிர்வாகத்தின் சீர்கேட்டை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் நிர்வாகத்தினை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதில் காலையிலிருந்து மதியம் நான்கு மணி வரை விவசாயிகள் பொருளான எல் மணிலா உள்ளிட்ட பல வகையான விவசாயிகள் கொண்டு வந்த விலை பொருளுக்கு எந்த ஒரு வியாபாரியும் விலை நிர்ணயம் செய்யவில்லை இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திடீரென ஜெயங்கொண்டம் திருச்சி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் இந்த பேச்சுவார்த்தையில் உடன்படாத விவசாயிகள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து விசாரித்த போது வியாபாரி சுப்பிரமணியன் என்பவருக்கும் சூப்பிரண்டு ராஜா என்பவருக்கும் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக வியாபாரிகள் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் வியாபாரி சுப்பிரமணியனுக்கு ஆதரவாக இன்று அனைத்து வியாபாரிகளும் விவசாயிகளின் பொருளுக்கு விலை மதிப்பீடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *