ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் மாவட்ட ஆயுதபடை மைதானத்தில் பள்ளி வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளனவா என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ ஆய்வு மேற்க்கொண்டார்


திருவாரூர் மாவட்ட ஆயுதபடை மைதானத்தில் பள்ளி வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளனவா என மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ ஆய்வு மேற்க்கொண்டார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் உடனிருந்தார்
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
பள்ளி வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருவாரூர்மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 70 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி 283 வாகனங்கள் சோதனை மேற்க்கொள்ளப்பட்டுவருகிறது.

இப்பள்ளி வாகனங்களில் கேமிரா பொருத்தப்பட்டுள்ளதா, அவசர கால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக வாகனத்தில் ஏற தாழ்வான படிக்கட்டுகள், பள்ளி வாகனம் என்ற அறிவிப்பு, வேககட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, முதலுதவி பெட்டி தீயணைப்பு கருவி வைக்கப்பட்டுள்ளதா பிரதிப்பலிப்பான் வில்லை ஒட்டப்பட்டுள்ளதா என்று அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

பள்ளி வாகனங்களில் ரிவர்ஸ் கேமிரா உள்ளிட்ட ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் அதை உடனடியாக பள்ளி நிர்வாக கவனத்திற்கு வாகன ஒட்டுனர்கள் எழுத்து பூர்வமாக தெரியப்படுத்த வேண்டும்தொழில்நுட்ப கோளாறுகளை மே-31க்குள் சரிசெய்து அனுமதிப்பெற்றபின்னே பள்ளி வாகனங்கள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது வாகன ஓட்டுனர்கள் அவரவர் பள்ளிக்குரிய சீருடைகள் அணிவதை தடுத்து காக்கி சீருடை அணிய உத்தரவிட்டுள்ளோம்.

மேலும், பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் போது முழு கவனத்துடன் ஒட்டுனர்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் இக்கல்வியாண்டு விபத்தில்லா ஆண்டாக அமைய வேண்டும் என தி.சாருஸ்ரீ தெரிவித்தார்
இந்த சோதனையின் போது முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாலசுப்ரமணியன் (திருவாரூர்) கருப்பண்ணன் (மன்னார்குடி) அசோக்குமார் (திருத்துறைப்பூண்டி) உள்பட போக்குவரத்து அலுவலர்கள் பணியாளர்கள்பள்ளி வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *