எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் நமிநந்தி அடிகள், சேக்கிழார் குருபூஜை விழா மே.24, 25 ஆகிய நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

நமச்சிவாய வாழ்க திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் இக்கோவிலில் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மே.24-ல் வினாயகர், ஸ்ரீகைலாசநாதர், அறம்வளர்நாயகி, நந்தியெம்பெருமாள், சுப்பிரமணியர், அறுபத்து மூன்று நாயன்மார்கள் திரு உருவங்களுக்கும், ஐம்பெரும் மூர்த்திகள், நமிநந்தி அடிகள், சேக்கிழார் ஆகியோரின் ஐம்பொன் திருமேனிகளுக்கும் திருமஞ்சன அலங்காரம், பேரொளி வழிபாடுகள் நடைபெற்றன.

கோவில் அர்ச்சகர்கள் க.உமாபதி சிவாச்சாரியார், க.தட்சிணாமூர்த்தி சிவாச்சாரியார், ஸ்ரீமதுதில்லைநாதசிவம் ஆகியோர் இதனை நடத்தி வைத்தனர்.

இதனையடுத்து மே.25-ல் கைலாய வாத்தியம் முழங்க கோவில் வலம் வருதல், மகாதீபம் ஏற்றுதல், அன்னதானம், கைலாய வாத்தியங்களுடன் சாமி திருவீதி உலா வருதல் போன்றவை நடைபெற்றது.

முன்னதாக நமிநந்தி அடிகள் தெய்வ சேக்கிழார் பெருமான் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கைலாய வாத்தியங்கள் மற்றும் வான வேடிக்கையுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் செய்தவாறு முக்கிய வீதி வழியாக சுவாமி திருவீதி உலா அழைத்துவரப்பட்டார்.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து சென்றனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *