ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மேற்க்கொண்டார்

குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட 52.புதுக்குடி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் பழுதடைந்த வீடுகள் புதுப்பித்தல் மற்றும் புதிதாக கட்டப்பட்டுவரும் வீடுகளையும், மேலபாலையூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டுவருவதையும், 42.அன்னவாசல் ஊராட்சியில் 4.33 லட்சம் மதிப்பிட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சம்பா கட்டளை வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெறுவதையும் பெருமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றியத்தொடக்கபள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுவருவதையும், செருகளத்தூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றியத்தொடக்கபள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுவருவதையும், சித்தாடி ஊராட்சியில் கோவில் குளம் தூர்வாரும் பணி நடைபெறுவதையும், மேலராமன் சேத்தி பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றியத்தொடக்கபள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுவருவதையும், விழிதியூர் ஊராட்சி ஒன்றியத்தொடக்கபள்ளியில் சமையலறை கட்டும் பணி நடைபெற்றுவருவதையும், செம்பியன் கூத்தலூர் ஊராட்சி ஒன்றியத்தொடக்கபள்ளியில் சமையலறை கட்டும் பணி நடைபெற்றுவருவதையும், புதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையலறை கட்டும் பணி நடைபெறுவதையும் கூத்தலூர் அரசு தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டும் பணி நடைபெறுவதையும் ஏரவாஞ்சேரி மணவாளநல்லூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
பள்ளிகளில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகளை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முன்னதாக பணிகளை விரைந்து முடிந்திட உரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்
ஆய்வில் குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர் சுவாமிநாதன் (ஊராட்சிகள்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *